Home உலகம் டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட டிரம்ப் அனுமதி

டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட டிரம்ப் அனுமதி

66
0
SHARE
Ad

வாஷிங்டன்: மலேசியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மிகப் பிரபலமாக இருக்கும் செயலி சீனாவின் ‘டிக்டாக்’. இந்தியாவில் இந்த செயலிக்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.

அதிபர் ஜோ பைடன் அரசாங்கம் டிக்டாக் செயல்பட தடைகளை விதித்தது. இருந்தாலும் டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து நீதிமன்றங்கள் மூலமாக அந்தத் தடைகளுக்கு எதிராகப் போராடி வந்தது. அடுத்த அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இனி அமெரிக்காவில் டிக்டாக் தொடர்ந்து செயல்பட முடியும்.

சுமார் 12 மணிநேரம் முடக்கப்பட்டிருந்த டிக்டாக் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் இணையம், கையடக்கக் கருவிகளின் வழி வலம் வரத் தொடங்கியுள்ளது.