புதுடெல்லி: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) இந்தியக் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அணிவகுப்பிலும் கலந்து கொள்ள இந்தோனிசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ சிறப்பு பிரமுகராக வருகை தந்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியக் குடியரசு தின விழாவில் ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபரை அழைப்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இந்த முறை இந்தோனிசிய அதிபர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியா தனது முதலாவது குடியரசு தினத்தைக் கொண்டாடியபோது இந்தோனிசியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டது. அதன் பின்னர் 75 ஆண்டுகள் கடந்து இப்போது மீண்டும் இந்தோனிசியா சார்பில் அதன் அதிபர் இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டுள்ளார்.