Home நாடு பிகேஆர்: நூருல் இசா 9,803 வாக்குகள் – ரபிசி 3,866 வாக்குகள்!

பிகேஆர்: நூருல் இசா 9,803 வாக்குகள் – ரபிசி 3,866 வாக்குகள்!

151
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நேற்று வெள்ளிக்கிழமை (மே 23) இங்குள்ள பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் பரபரப்பாக நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவருக்கான போட்டியில் 44 வயதான நூருல் இசா வெற்றி பெற்றார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு 9,803 வாக்குகள் கிடைத்த நிலையில் ரபிசி ரம்லிக்கு 3,866 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 32,030 ஆயிரம் பேராளர்கள் வாக்களிப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களே வாக்களித்துள்ளதும், கட்சியில் நிலவும் வாக்களிப்பு நடைமுறைகளின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக அன்வார் இப்ராகிம் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உதவித் தலைவர்கள் –
யாருக்கு எத்தனை வாக்குகள்?

#TamilSchoolmychoice

உதவித் தலைவர் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஷாரி 7,955 வாக்குகள் பெற்று முதலாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் 5,889 வாக்குகள் பெற்று இரண்டாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவதாக துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஆர்.ரமணன் 5,895 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

அமைச்சர் சாங் லீ காங் 5,757 வாக்குகள் பெற்று நான்காவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார்.

மகளிர் பகுதித் தலைவிக்கான தேர்தலில் பாட்லீனா சிடேக் 2,890 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளைஞர் பகுதித் தலைவராக அன்வாரின் அரசியல் செயலாளர்  முகமட் காமில் அப்துல் முனிம் போட்டியின்றி வெற்றி பெற்றார்.