Home அரசியல் ஆபாச விசிடி அவதூறு தொடர்பில் ஐவருக்கு எதிராக டத்தோ கணேசன் வழக்கு தாக்கல்

ஆபாச விசிடி அவதூறு தொடர்பில் ஐவருக்கு எதிராக டத்தோ கணேசன் வழக்கு தாக்கல்

522
0
SHARE
Ad

indexஈப்போ,பிப்.7-  தம்மைத் தொடர்பு படுத்திய ஆபாச விசிடி விவகாரத்தில் பேரா சட்டமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், ஆதி.சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக  டத்தோ ஆர்.கணேசன் 2 கோடியே 50 லட்சம் கேட்டு நேற்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 21.12.212 அன்று பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது வீ.சிவகுமார், ஆதி.சிவசுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களுடன் தான் ஆபாச வீடியோ ஒன்றில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தனர்.

இந்த செய்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக  டத்தோ ஆர்.கணேசன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பாக 22.12.2012 ஈப்போ காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பதாகவும், மேலும் அந்த குற்றச்சாட்டையும் அதன் வார்த்தைகளையும்  மீட்டுக் கொள்ளுமாறு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தும் இது வரை எந்த பதிலும் தரவில்லை என்றும் கணேசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் பேரா சட்டமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், ஆதி.சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 2 கோடியே 50 லட்சம் கேட்டு வழக்கு தொடுப்பதாக டத்தோ ஆர்.கணேசன் நேற்று பகல் 1 மணியளவில் ஈப்போ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு அவருடைய துணைவியாருடன் கணேசன் வந்திருந்தார். இவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஷாட் பஷீர் ஆஜராகி இருந்தார்.

பேரா மாநில ம.இ.கா. அலுவலகத்திற்கு டத்தோ ஆர்.கணேசன் படம் ஒட்டப்பட்ட குறுந்தட்டு தங்களுக்கு வந்ததாக பேரா சட்டமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், ஆதி.சிவசுப்பிரமணியம் ஆகியோர் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிட்டதக்கது.