Home இந்தியா என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்: விஜயகாந்த் பேட்டி

என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்: விஜயகாந்த் பேட்டி

547
0
SHARE
Ad

Vijaykanth-Sliderதஞ்சாவூர்,செப்.18– தஞ்சை  நீதிமன்றத்தில் விஜயகாந்த் இன்று ஆஜரானார்.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

2012–ம் ஆண்டு முதல் தாதுமணல் கொள்ளையை தடை செய்யக்கோரி பொதுக்கூட்டத்தில் நான் பேசி வருகிறேன். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

#TamilSchoolmychoice

சமீபகாலமாக என் மீதும் எனது கட்சிக்காரர்கள் மீதும் 50 முதல் 60 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனை சட்டப்படி சந்திப்பேன். இந்த வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை.

மக்களுக்காக மக்கள் பணி திட்டம் தொடர்ந்து நடை பெறும். போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீதிமன்றத்திற்கு  வரும்போது கட்சிக்காரர்கள், பொதுமக்களை சந்திப்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.