Home நாடு குற்றத்தடுப்பு சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டாம் – மாமன்னருக்கு கர்பால் மகஜர்

குற்றத்தடுப்பு சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டாம் – மாமன்னருக்கு கர்பால் மகஜர்

599
0
SHARE
Ad

Karpal-Singhகோலாலம்பூர், அக் 19 – குற்றத்தடுப்பு சட்ட திருத்தத்திற்கு (பிசிஏ) அங்கீகாரம் அளிக்க வேண்டாம் என்று ஜசெக தலைவர் கர்பால் சிங், மாமன்னரிடம் மகஜர் ஒன்றை நேற்று இஸ்தானா நெகாராவில் சமர்ப்பித்தார்.

மாமன்னரின் ஒப்புதல் இல்லாவிட்டாலும் அத்திருத்தங்கள் 30 நாட்களில் தானாக சட்டமாகிவிடும் என்பதால் தற்போது அந்த மகஜரை கர்பால் கொடுத்துள்ளார்.

இது குறித்து கர்பால் கூறுகையில், “அந்த சட்ட திருத்தத்திற்கு மாமன்னர் ஒப்புதல் அளிக்க வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் கடுமையான சட்டம் ஒன்றை அமலுக்கு வராமல் தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மாமன்னரின் செயலாளர் நேற்று கர்பாலிடமிருந்து அந்த மகஜரைப் பெற்றுக்கொண்டார்.