Home கலை உலகம் மலேசிய ரசிகர்களின் பாராட்டு மழையில் நடிகர் ஆர்யா!

மலேசிய ரசிகர்களின் பாராட்டு மழையில் நடிகர் ஆர்யா!

565
0
SHARE
Ad

IMAG0650கோலாலம்பூர், நவம்பர் 27- “இரண்டாம் உலகம்” திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் ஆர்யா இன்று மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

இன்று, பிற்பகல் 12.00 மணி தொடங்கி, 1.00 மணி வரை அங்கசாபுரியுலுள்ள மின்னல் வானொலியில் தனது இரசகர்களுடன் உரையாடி மகிழ்ந்த ஆர்யா, மிக எளிமையான தோற்றத்துடன்  காணப்பட்டார்.

இரண்டாம் உலகம் திரைப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டிப் பேசிய  ரசிகர்கர்களின் கருத்துக்களைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

#TamilSchoolmychoice

இதனை தொடர்ந்து, ஆர்யாவின் நேர்காணல் இன்று மாலை 5.30- 6.30 மணி வரையிலும் டிஎச்ஆர் ராகாவிலும் நடைப்பெறும்.

மேலும், இன்று இரவு 9.00 மணிக்கு கோலாலம்பூர் கொலிசியம் திரையரங்கிலும், இரவு 9.30 மணிக்கு செந்தூல் திரையரங்கிலும் ஆர்யா தனது ரசிகர்களை சந்திப்பார்.

நாளை வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை ஆஸ்ட்ரோ விண்மின் அலைவரிசையில் நேரடி சந்திப்பு இடம் பெறும். இரவு 9.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் திரையரங்கில் ரசிகர்களை சந்திப்பார்.

செய்தி – பாரதி முனுசாமி