Home நாடு மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் மீது அவதூறு வழக்கு – காலிட்

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் மீது அவதூறு வழக்கு – காலிட்

524
0
SHARE
Ad

khalid-ibrahimகோலாலம்பூர், ஜன 23 –  மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் மற்றும் அரசாங்கத்தின் மீது சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் அவதூறு வழக்கு தொடுக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தன்னைப் பற்றிய அவதூறான கருத்துக்களை கூறிய அவர்கள், அந்த நேர்காணலை ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் வலைத்தளத்திலும், யூடியூப் வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளதாக காலிட் குறிப்பிட்டார்.

மேலும், அந்த நேர்காணல் பதிவிறக்கம் செய்யப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டதாகவும் காலிட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த நேர்காணல் மலேசியாகினி இணையத்தளத்திலும் தலைப்புச்செய்தியாக பிரசுரிக்கப்பட்டது என்று காலிட் கூறினார். அந்த கட்டுரையில் காலிட் லஞ்சம் வாங்குபவர், நம்பிக்கைக்குரியவர் அல்ல, அரசியல்வாதியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் என்று தன்னைப் பற்றி மிக அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று தனது அவதூறு வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அந்த நேர்காணலை வெளியிட்ட மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் அபு காசிம் மற்றும் அரசாங்கம் அதற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், தங்களது அவதூறு வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டே இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்குமாறு தனது வழக்கறிஞர்கள் மூலமாக கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்காத காரணத்தால் தற்போது அவதூறு வழக்கு பதிவு செய்வதாகவும் காலிட் கூறியுள்ளார்.