Home நாடு தாப்பா தொகுதி வெற்றியை தே.மு தக்க வைத்தது!

தாப்பா தொகுதி வெற்றியை தே.மு தக்க வைத்தது!

651
0
SHARE
Ad

DATUK SERI G PALANIVELஈப்போ, பிப் 21 – மே 5 பொதுத்தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு எதிராக பிகேஆர் தாக்கல் செய்திருந்த மனுவை ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இதன் மூலம் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றி நிலை நிறுத்தப்படுகின்றது.

இது குறித்து ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட தீர்ப்பில், “தேசிய முன்னணியின் வேட்பாளர் டத்தோ சரவணனின் வெற்றியை எதிர்த்து பிகேஆர் வேட்பாளர் கே.வசந்தகுமார் தாக்கல் செய்திருந்த மனுவில் பல குறைபாடுகள் உள்ளன.

#TamilSchoolmychoice

அதில் கையூட்டு வாக்கப்பட்டதாகக் கூறப்படுவதில், யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

மேலும், அம்மனுவில் கூறப்பட்டிருக்கும் பல தகவல்கள் முழுமையாக இல்லை. ஆகவே தாப்பா தொகுதியில் டத்தோ சரவணின் வெற்றி நிலை நிறுத்தப்படுகின்றது” என்று நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி தீர்ப்பளித்தார்.

மேலும், மனுதாரர் செலவுத்தொகையாக பிரதிவாதிகள் சரவணனுக்கு 50 ஆயிரம் வெள்ளியும், தாப்பா நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நிர்வாக அதிகாரி பக்காருக்கு 30 ஆயிரம் வெள்ளியும், தேர்தல் ஆணைக்குழுவிற்கு 30 ஆயிரம் வெள்ளியும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த பொதுத்தேர்தலில், தாப்பா நாடாளுமன்ற தொகுதியில், தேசிய முன்னணியின் சார்பாகப் போட்டியிட்ட டத்தோ எம். சரவணனுக்கு எதிராக பிகேஆர் வேட்பாளர் கே.வசந்தகுமார் களமிறங்கினார். எனினும், அத்தொகுதியில் சரவணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.