Home இந்தியா அடுத்தும் நமது ஆட்சி தான் நடக்கும்,எம்.பி.க்களை உற்சாகப்படுத்தினார் சோனியா காந்தி!

அடுத்தும் நமது ஆட்சி தான் நடக்கும்,எம்.பி.க்களை உற்சாகப்படுத்தினார் சோனியா காந்தி!

459
0
SHARE
Ad

25-1387960180-sonia-gandhi334-600-jpgடெல்லி, மார் 5 – ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளை பெரிதுபடுத்த வேண்டாம். நம்பிக்கையோடு  இருங்கள். நம் அரசின் சாதனைகளை  மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். அடுத்து அமையப் போவதும்  நம் ஆட்சிதான்  என, காங்கிரஸ் எம்.பி.க்களிடம் சோனியா கூறியுள்ளார். சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெறும் போதும், இறுதி நாளின் போதும், காங்கிரஸ் கட்சி கூட்டத்தை நடத்தி  தன் கட்சி எம்.பி.க்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா  விருந்து அளிப்பது வழக்கம்.

இப்போதுல்ல விவகாரத்தால் சட்டமன்றம் முடங்கி விருந்து நிகழ்ச்சி  நடைபெறவில்லை. இதனால், நேற்று முன்தினம், காங்கிரஸ், எம்.பி.க்களுக்கு, டில்லியில் சோனியா இரவு விருந்தளித்தார். தன் இல்லத்திற்கு காங்கிரசை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்களை அழைத்திருந்தார். விருந்தின் போது, ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த  எம்.பி.க்களிடமும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து  சில நிமிடங்கள் பேசியபடி இருந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம், வாசன், கே.எஸ்.அழகிரி, விஸ்வநாதன் உள்ளிட்ட, எம்.பி,க்களிடம், சில நிமிடங்கள் பேசிய சோனியா கூறியதாவது, ஊடகங்களில் வரும் செய்திகளை பெரிதுபடுத்த வேண்டாம். தேர்தல் முடிவுகள் குறித்து, வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகளை  நம்பவும் வேண்டாம். உண்மையான நிலவரம்  அதுவல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வளவோ சாதனைகளை செய்துள்ளது.

#TamilSchoolmychoice

ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவை பற்றி பொதுமக்களிடம் நேரடியாக எடுத்துக் கூறுங்கள். அதுவே வெற்றியை தேடித்தரும். கவலைப்பட வேண்டாம். இந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். அடுத்து அமையவுள்ள ஆட்சியும்  நம் ஆட்சியாகத் தான் இருக்கும் என சோனியா காந்தி கூறினார்.