Home நாடு தியான் சுவாவின் கைப்பேசியை காவல்துறை பறிமுதல் செய்தது!

தியான் சுவாவின் கைப்பேசியை காவல்துறை பறிமுதல் செய்தது!

477
0
SHARE
Ad

Tian_Chua-TMIகோலாலம்பூர், ஏப்ரல் 15 – தேச நிந்தனை வழக்கு தொடர்பாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவின் கைப்பேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில், காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இது குறித்து கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு துணைத்தலைவர் கைரி ஆஹ்ரசா வெளியிட்ட அறிக்கையில், தியான் சுவாவின் கைப்பேசியை விசாரணைக்காக கைப்பற்றியதை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு பற்றிய மேல் விவரங்கள் பத்திரிகைகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கைரி தெரிவித்தார்.