Home நாடு எம்.எச்.370 – மலேசியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் – ஒபாமா உறுதி

எம்.எச்.370 – மலேசியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் – ஒபாமா உறுதி

546
0
SHARE
Ad

MH370 (2)கோலாலம்பூர், ஏப்ரல் 28 – கடந்த மார்ச் 8ஆம் தேதி காணாமல் போன எம்எச் 370 மாஸ் விமானத்தைத் தேடும் பணிக்கும் புலன்  விசாரணைக்கும் அமெரிக்கா தொடர்ந்து உதவும் என அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்த ஒபாமா, பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் இணைந்து  நேற்று நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

காணாமல் போன எம்எச் 370 விமானத்தை தேடும் பணிக்கும் புலன் விசாரணைக்கும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்று ஒபாமா கூறினார்.

obamaவிமானம் காணாமல் போனதிலிருந்து அமெரிக்க அதிகாரிகள் மலேசிய அதிகாரிகளுடன் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளனர் என்று குறிப்பிட்ட ஒபாமா, இவ்வகையில் மலேசியாவிற்கு அமெரிக்கா எல்லா வகையிலும் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் உறுதியளித்தார்.

இதுவரை விமானத்தைத் தேடி எந்த பயனும் அடைய முடியவில்லை என்றாலும் மேலும் பணிகள் நடைபெற அமெரிக்கா தொடர்ந்து உதவும் எனவும் அவர் சொன்னார்.

இவ்வேளையில் காணாமல் போன அந்த விமானத்தில் பயணம் செய்த குடும்பத்தினருக்கு அமெரிக்கா வாழ் மக்கள் சார்பாக தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஒபாமா கூறினார்.

சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று மேலும் அவர் .சொன்னார்.