கோலாலம்பூர், மே 27 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.
அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 -ம் தேதி தொடங்கி ஜூலை 13 -ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பிரேசில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
போட்டிகளை நடத்தும் நாடு என்பதால் பிரேசில் நேரடியாகவே இந்தப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்றுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அறிமுகம் #1: ஸ்பெயின்
சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் தரவரிசை பட்டியலின் படி, நடப்பு உலக வெற்றியாளரும் (சாம்பியன்), ஐரோப்பிய வெற்றியாளருமான ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
(ஸ்பெயின் அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)
(ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் – விண்செண்ட் டெல் பாஸ்க்)
படம்: EPA