Home இந்தியா நடு வானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்! தரையிறக்கப்பட்ட டிரீம்லைனர் விமானம்!

நடு வானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்! தரையிறக்கப்பட்ட டிரீம்லைனர் விமானம்!

608
0
SHARE
Ad

air-india-dreamliner2டெல்லி, ஆகஸ்ட் 22 – ஏர் இந்தியா டிரீம்லைனர் விமானத்திற்கு தொடர்ந்து பிரச்சனையாகவே உள்ளது. நம்பி ஏறி உட்கார மக்கள் அஞ்சும் நிலை அதிகரித்து வருகிறது.

கொல்கத்தாவுக்கு டெல்லியிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானம் நடு வானில் செல்லும் போது ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இதையறிந்த வமானி, விமானத்தை மீண்டும் டெல்லிக்கேத் திருப்பி இறக்கினார். அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது டிரீம்லைனர் வமானம். குறிப்பாக ஜன்னல் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடையும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்புதான் சியோல் விமானத்தில் என்ஜீன் பிரச்சனை காரணமாக போயிங் 787 ரக விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். அதற்கு அடுத்த நாள் இந்தப் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது.

அதேபோல துபாயில் ஒரு விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். விமானத்தின் ஸ்பாய்லர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

1airindiaடெல்லி – கொல்கத்தா விமானம் லக்னோ மீது பறந்து கொண்டிருந்தபோது கண்ணாடி விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணாடியின் வெளிப்புறத்தில்தான் விரிசல் ஏற்பட்டிருந்தது.

பல அடுக்குகளைக் கொண்டது விமானங்களின் ஜன்னல் கண்ணாடிகள். அவ்வளவு சீக்கிரம் உடையாது. அதிகபட்சம் வெளிப்புரத்தில் விரிசல் ஏற்படலாம். இதனால் விமானத்திற்குப் பாதிப்பு வராது. இருப்பினும்

சமச்சீரற்ற வெப்ப நிலை அல்லது ஏதாவது பறவை அல்லது கல் மோதினால் இப்படி கண்ணாடியில் விரிசல் ஏற்படலாம். ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானங்களில் அடிக்கடி கண்ணாடியில் விரிசல் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் இது போல பலமுறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.