Home நாடு எம்எச் 370 : இந்தியப் பெருங்கடலில் 58 திடமான பொருட்கள் கண்டுபிடிப்பு – போக்குவரத்து அமைச்சர்...

எம்எச் 370 : இந்தியப் பெருங்கடலில் 58 திடமான பொருட்கள் கண்டுபிடிப்பு – போக்குவரத்து அமைச்சர் தகவல்

568
0
SHARE
Ad

MH370கோலாலம்பூர், செப்டம்பர் 15 – எம்எச் 370 விமானத்தை தேடுவதற்கான கடின முயற்சிகள் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் 58 திடமான பொருட்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவை மாயமான விமானத்தின் பாகங்களா என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ  லியோவ் தெரிவித்துள்ளார்.

நடுக்கடலில் காணப்படும் இப்பொருட்கள் அனைத்தும் இந்தியப் பெருங்கடலின்  கடற்படுகையுடன் தொடர்புடைய பொருட்களாகத் தெரியவில்லை எனக் குறிப்பிடும் நிபணர்கள், இக்காரணத்தினாலேயே அவை மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

விமானத்தை தேடும் முயற்சியின் பலனாக விமானம் கிடைத்ததோ இல்லையோ, வேறு சில அரிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலில் சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள எரிமலைகள் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் நிலைமை குறித்து தகவல் ஊடகங்களும், பொதுமக்களும் கொஞ்சகாலம் மறந்திருந்தனர்.

தற்போது அந்த விமானத்தின் தேடுதல் வேட்டை மீண்டும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.