Home நாடு கிறிஸ்துவர்கள் நல்ல பாடமாகக் கருத வேண்டும் சுல்கிப்ளி நூர்டின் கருத்து

கிறிஸ்துவர்கள் நல்ல பாடமாகக் கருத வேண்டும் சுல்கிப்ளி நூர்டின் கருத்து

652
0
SHARE
Ad

Zulkifli-Nordin-featureகோலாலம்பூர், நவம்பர் 15 – மலாய் மற்றும் இபான் மொழி பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும், பின்னர் திரும்ப அளிக்கப்பட்டதையும் மலேசிய பைபிள் சங்கம் மற்றும் கிறிஸ்துவர்கள் சமூகம் நல்ல பாடமாகக் கருத வேண்டும் என பெர்காசா முன்னாள் துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் (படம்) தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் வினியோகிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் மலேசிய கிறிஸ்துவ சங்கத்திடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் சுல்கிப்ளி நோர்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“அந்த பைபிள்களில் தடை செய்யப்பட்ட விஷயங்கள் இருந்தன. மீண்டும் இத்தகைய கோபமூட்டும் செயல்களில் கிறிஸ்துவர்கள் ஈடுபடக் கூடாது. மேலும் நாட்டின் சட்டங்களையும் மீறக் கூடாது. மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க கிறிஸ்துவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் சுல்கிப்ளி நோர்டின் தெரிவித்துள்ளார்.