Home வணிகம்/தொழில் நுட்பம் ஜிஎஸ்டி, நாணய மதிப்பின் வீழ்ச்சி கட்டுமானத் துறையை பாதிக்கவில்லை – மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பு!

ஜிஎஸ்டி, நாணய மதிப்பின் வீழ்ச்சி கட்டுமானத் துறையை பாதிக்கவில்லை – மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பு!

588
0
SHARE
Ad

construction site & workersகோலாலம்பூர், டிசம்பர் 26 – மலேசிய கட்டுமானத் துறை அடுத்த சில வருடங்களில் நல்ல வளர்ச்சியை எட்டும் என மலேசிய கட்டுமானக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ அகமட் சைனி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“மலேசியாவில் கடந்த சில மாதங்களாக பொருட்களின் குறைவான தேவை காரணமாக உள்நாட்டு நாணய மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. அதேபோல்  ‘பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி’ (Goods and Services Tax) தொடர்பான அச்சம் வர்த்தகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருகின்றது. எனினும் இவற்றால், மலேசிய கட்டுமானத் துறைக்கு இதுவரை எந்தவொரு பின்னடைவும் ஏற்படவில்லை.”

#TamilSchoolmychoice

“இது நாட்டிற்கு பல சாதகமான அம்சங்களை ஏற்படுத்தும். ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்வகிக்கும் காரணிகளில் கட்டுமானத் துறை முக்கிய பங்கு வகிக்கும். அதனால், மலேசிய கட்டுமானத் துறையின் வளர்ச்சி மகிழ்ச்சியை அளிக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், “ஜிஎஸ்டி மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி கட்டுமானத் துறையை பாதிக்காததற்கு முக்கிய காரணம், கட்டுமானத்திற்குத் தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முன்னேற்றம் அடுத்த வருடமும் தொடரும். எனினும், அதனை மேலும் வளர்ச்சி பெறச் செய்ய அரசின் சீரிய முயற்சியும் தேவைப்படுகின்றது”

“நிலங்களின் விலைகள் குறைவாக உள்ள இந்த நேரத்தில், புற நகர் பகுதிகளையும் நகர மயமாதலுக்கு உட்படுத்த வேண்டும். அங்கு தேவையான அனைத்து போக்குவரத்து மற்றும் சாலைகளை அரசு அமைக்க வேண்டும்” என்று அவர்  கோரிக்கை வைத்துள்ளார்.

அகமட் சைனி கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில், கடந்த 6 மாதங்களில் மட்டும் மலேசியக் கட்டுமானத் துறை 14.3 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.