Home நாடு ஊக்கத் தொகையை திருப்பி அளிக்க வேண்டும்: காலிட்டின் 8 சகாக்களுக்கு நோட்டீஸ்!

ஊக்கத் தொகையை திருப்பி அளிக்க வேண்டும்: காலிட்டின் 8 சகாக்களுக்கு நோட்டீஸ்!

628
0
SHARE
Ad

khalid ibrahimபெட்டாலிங் ஜெயா, ஜனவரி 6 – சிலாங்கூர் அரசிடம் இருந்து முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமின் சகாக்கள் 8 பேர் பெற்றுள்ள 2.6 மில்லியன் ரிங்கிட் ஊக்கத் தொகையை அரசுக்கு திருப்பித் தர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 8 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 14 நாட்களுக்குள் ஊக்கத் தொகையை மந்திரி பெசார் இன்கோர்ப்பரேட்டட் நிறுவனத்திற்கு திருப்பி அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“விரிவான விசாரணையின்போது இந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளது தெரியவந்தது. எனவே சட்டரீதியிலான ஆலோசனை பெற்ற பிறகு புதிய மந்திரி பெசார் இன்கோர்ப்பரேட்டட் நிறுவனம் சார்பாக 8 பேருக்கும் சட்ட முன்னறிவிப்பு (நோட்டீஸ்) அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது,” என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நோட்டீசுக்கு கட்டுப்படாதவர்கள் ஈது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், நோட்டீஸ் குறித்து ஆலோசிக்க 8 பேருக்கும் உரிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார்.

“சம்பந்தப்பட்டவர்கள் முதலில் அந்த ஊக்கத் தொகையை மந்திரி பெசார் இன்கோர்ப்பரேட்டட் நிறுவனத்திடம் திருப்பி அளிக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊக்கத் தொகை எவ்வளவு என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும்,” என்றார் அஸ்மின் அலி.