Home நாடு யூகங்களின் அடிப்படையில் முடிவு வேண்டாம் – லியோ தியோங் லாய்!

யூகங்களின் அடிப்படையில் முடிவு வேண்டாம் – லியோ தியோங் லாய்!

654
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர், ஜனவரி 6 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானம் பயணம் மேற்கொண்ட விமான வழித்தடம் குறித்து யாரும் யூகங்களின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த விமானம் விபத்தைச் சந்தித்த அன்று, இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான வழித்தட அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என இந்தோனேசிய அரசு அறிவித்திருந்தது.

இதுகுறித்து குறிப்பிட்ட லியோ தியோங் லாய், இந்தோனேசிய அரசாங்கம் இது தொடர்பான தனது விசாரணையை முடிக்கும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

“ஏர் ஆசியா விமானம் உரிய வழித்தட அனுமதியைப் பெறவில்லை என இந்தோனேசிய அரசு கூறியுள்ள போதிலும், சிங்கப்பூர் அரசு உரிய அனுமதியைப் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளது. எனவே நாம் பொறுமையுடன் காத்திருப்பது அவசியம்,” என்று லியோ தியோங் லாய் கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் இந்தோனேசிய அரசு கூடுதல் உதவி கேட்டுள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மலேசிய அரசு இதுவரை 100 ஆழ்கடல் நீச்சல் வீரர்களை விபத்துப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மலேசிய குழு சுமார் 14,985 சதுர கடல் மைல்கள் பரப்பளவில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது.

மேலும் மலேசியாவில் இருந்து 3 கப்பல்கள் ஜாவா கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன,” என்றார் லியோ தியோங் லாய்.