Home நாடு அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஹாடி அவாங் – வான் அசிசா – இருவரில் யார் ?

அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஹாடி அவாங் – வான் அசிசா – இருவரில் யார் ?

544
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 21 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறை சென்றுள்ள நிலையில், அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தேர்வு செய்யப்பட்டால் எந்தவொரு சிக்கலும் எழ வாய்ப்பில்லை என பாஸ் தகவல் பிரிவு தலைவர் மாபுஸ் ஓமார் தெரிவித்துள்ளார்.

Hadi Awang PAS Presidentஎனினும் இஸ்லாமிய கட்சியின் ஆதரவு மட்டுமல்லாது பக்கத்தான் கூட்டணியின் பரவலான ஆதரவும் அப்துல் ஹாடிக்கு கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அனைவரும் அவர் (அப்துல் ஹாடி) எதிர்க்கட்சித் தலைவர் ஆக வேண்டும் எனக் கருதும் பட்சத்தில் எந்தவொரு சிக்கலும் எழ வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்,” என்றார் ஓமார்.

#TamilSchoolmychoice

அண்மையில் நடந்த பக்காத்தான் தலைவர்கள் கூட்டத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக நடைபெறவிருந்த கூட்டம் பாஸ் ஆன்மீகத் தலைவர் டத்தோ நிக் அசிஸ் காலமானதையடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Wan Azizah Wan Ismailஅப்துல் ஹாடி அவாங்கை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும் என அக்கட்சியின் உலாமாக்கள் பிரிவு தீவிரமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வென்று வந்தால் வான் அசிசாவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என மக்கள் கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான ஜசெக முன்மொழியக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சையில் இறங்கினால் அதனால், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் வாய்ப்புகள் பாதிக்கப்படக் கூடும் என்பதால், அந்த இடைத் தேர்தல் முடியும்வரை அடுத்த எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மக்கள் கூட்டணி ஒத்தி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.