Home இந்தியா ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

577
0
SHARE
Ad

jayaபெங்களூரு, மார்ச் 11 – ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி சார்பில் எழுத்து பூர்வமான வாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

நான் கொடுத்த காலக்கெடுவை ஏற்று அவர் தாக்கல் செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், இவ்வழக்கின் வாதம் முடிந்துவிட்டதாக அறிவித்து, தீர்ப்பு தேதியை அறிவித்து ஒத்திவைப்பேன் என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி கூறினார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பு வழங்கினார். குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டதால், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நான்கு பேரும் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

மேல்முறையீடு மனு மீதான இறுதிகட்ட விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் நேற்று நடந்தது. குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

வழக்கு விசாரணை தொடங்கியதும் குற்றவாளிகள் சார்பில் வக்கீல் செந்தில் சுமார் 177 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வமான வாதமும், சுமார் 65 பக்கங்களில் குற்றவாளிகளுக்கு வழக்கு காலத்தில் இருந்த வருமானம் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து விவர பட்டியலை தாக்கல் செய்தார்.

அதை பெற்று கொண்ட நீதிபதி, இந்த பட்டியல் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பார்த்து கேட்டார். அதற்கு தானும் எழுத்து பூர்வமாக பதில் வாதம் தாக்கல் செய்வதாக அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்துள்ள எழுத்து பூர்வமான வாதத்தில் உள்ள அம்சங்களை சுருக்கமாக எடுத்து கூறும்படி ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமாரிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி சி.ஆர். குமாரசாமி கூறுகையில், “இன்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியசுவாமி சார்பில் எழுத்து பூர்வமான வாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்”.

“நான் கொடுத்த காலக்கெடுவை ஏற்று அவர் தாக்கல் செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், இவ்வழக்கின் வாதம் முடிந்துவிட்டதாக அறிவித்து, தீர்ப்பு தேதியை அறிவித்து ஒத்திவைப்பேன்”.

“நான் தீர்ப்பை ஒத்திவைத்தபின் கொடுக்கும் எந்த ஆவணங்களையும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மாட்டேன்” என்று உறுதியாக நீதிபதி தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.