Home நாடு “சிறையைக் கண்டு அஞ்சாதீர்கள் – தொடர்ந்து உண்மையை எழுதுங்கள்” – ஹன்னா இயோ

“சிறையைக் கண்டு அஞ்சாதீர்கள் – தொடர்ந்து உண்மையை எழுதுங்கள்” – ஹன்னா இயோ

619
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 1 – ஹூடுட் கட்டுரை தொடர்பாக, ‘தி மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு, சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் ஹன்னா இயோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

hannah-yeoh

இது குறித்து ஹன்னா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“நான் முதன் முதலில் அரசியலில் சேரும் போது, மலேசிய அரசியல் மிகவும் ஆபத்தானது என்று என்னிடம் கூறினார்கள். சிறைக்கு கூட செல்ல வேண்டிவரும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் தற்போது உள்ள சூழலைப் பார்த்தால் பேராசிரியர்கள், நிர்வாக ஆசிரியர்கள், செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள் கூட அந்த பட்டியலில் இருக்கின்றார்கள். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். தொடர்ந்து பேசுங்கள். தொடர்ந்து சட்டத்தை பாதுகாக்க போராடுங்கள். தொடர்ந்து உண்மையை கற்றுக்கொடுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.” இவ்வாறு ஹன்னா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ‘தி மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று தலைமை நிர்வாக ஆசிரியர்களை காவல்துறை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

நேற்று அதே காரணத்திற்காக, ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் தலைமை நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் ‘தி எட்ஜ்’ செய்தி நிறுவனத்தின் பதிப்பாளர் ஹோ கை தட் ஆகிய இருவரையும் தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.