Home நாடு 3 நிர்வாக ஆசிரியர்கள் விடுதலை – மற்ற இருவர் இன்னும் காவலில்!

3 நிர்வாக ஆசிரியர்கள் விடுதலை – மற்ற இருவர் இன்னும் காவலில்!

576
0
SHARE
Ad

he-Malaysian-Insider-TMI-logo (1)கோலாலம்பூர், ஏப்ரல் 1 – தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும் காவல்துறையின் கோரிக்கையை நீதிபதி நேற்று நிராகரித்ததால், நிர்வாக ஆசிரியர் லியோனெல் மோரியாஸ், மலாய் மொழி செய்திப் பிரிவின் தலைமை ஆசிரியர் சுல்கிப்ளி சுலோங் மற்றும் மலாய் மொழி செய்தி ஆசிரியர் அமின் இஸ்கண்டார் ஆகியோர் நேற்று இரவு 8.20 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

டாங் வாங்கி காவல்நிலையத்தில் ஒரு இரவைக் கழித்த அவர்கள் நல்ல நிலையில் தான் இருக்கின்றார்கள் என அவர்களது வழக்கறிஞர் ஷியாஹ்ரெட்சான் ஹோகான் தெரிவித்துள்ளார்.

என்றாலும், மலேசியன் இன்சைடரின் தலைமை நிர்வாகி ஜஹாபர் சாதிக் மற்றும் ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் ஹோ ஆகிய இருவரும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும் காவல்துறையின் கோரிக்கை இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வருகின்றது என்றும் ஷியாஹ்ரெட்சான் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க செய்தியாளர்கள் தயாராக இருந்தும் ஏன் அவர்களை 24 மணி நேரம் தடுத்து வைக்கின்றனர் என்று ஷியாஹ்ரெட்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் ஹூடுட் பற்றிய கட்டுரை வெளியிட்டது தொடர்பில் மலேசியன் இன்சைடர் செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உட்பட 5 நிர்வாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.