Home உலகம் அமெரிக்காவின் அதிபராவார் ஹிலாரி கிளிண்டன் – ஒபாமா

அமெரிக்காவின் அதிபராவார் ஹிலாரி கிளிண்டன் – ஒபாமா

602
0
SHARE
Ad

Gallery-Obamas-Women-Hill-008வாஷிங்டன், ஏப்ரல் 13 – அமெரிக்காவின் அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிபராகும் பட்சத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று  அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க குடியரசு, ஜனநாயக  கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிட இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவை பொருத்தவரை கட்சிக்குள் தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறுபவரே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஜனநாயக கட்சியில்  முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி இன்று முறைப்படி அறிவிக்கும் என தெரிகிறது. அறிவிப்பு வெளியானது முதல் தீவிர  பிரச்சாரத்தில் ஹிலாரி ஈடுபட உள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை ஹிலாரி  பெறவுள்ளார். 67 வயதான ஹிலாரி, செனடராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்.

கடந்த முறை அதிபர் தேர்தல்  வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் குறைந்த ஓட்டில் தோல்வியை ஹிலாரி தழுவினார்.  இந்தமுறை அவர் வெற்றிபெறுவார் என தெரிகிறது.

இந்நிலையில், ஹிலாரி அமெரிக்காவின் அதிபராவார் என்றும், சிறந்த அதிபாராக விளங்குவார்  எனவும் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘‘அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரிக்கு எனது முழு ஆதரவு  உண்டு. சிறந்த நிர்வாகியாக திறம்பட செயல்பட்டுள்ளார். அவர் என்னுடைய நண்பர். ஹிலாரி சிறந்த அதிபராக விளங்குவார்’’ என்றார்.

அமெரிக்காவில் ஒருவர் இரண்டுமுறை தொடர்ந்து அதிபராக பதவி வகிக்கலாம். அதற்குமேல் தேர்தலில் நிற்கமுடியாது. 2-வது முறையாக அதிபராக  ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.