Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இந்திய வாக்குகளுக்கு லோக பாலமோகன் பொறுப்பாளரா?

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இந்திய வாக்குகளுக்கு லோக பாலமோகன் பொறுப்பாளரா?

613
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 13 மே 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்குகளுக்கு பொறுப்பாளராக கூட்டரசு பிரதேச துணை அமைச்சரும், பிபிபி கட்சியின் பினாங்கு மாநில தலைவருமான டத்தோ லோக பால மோகன் அம்னோவால் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.Loga Bala Mogan

நேற்று, பினாங்கு மாநிலத்தில், துணை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் நடைபெற்ற அம்னோ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மஇகாவில் தற்போது நடந்து வரும் அரசியல் போராட்டங்கள், மஇகா – சங்கப்பதிவகம் இடையில் நடைபெற்று வரும் வழக்கினால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், ஆகிய காரணங்களால் அம்னோவும் தேசிய முன்னணியும் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று பினாங்கு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

மேலும், பினாங்கு மாநிலத்தின் மஇகா தலைமைத்துவம் மிகவும் பலவீனமாக இருப்பதாலும் பினாங்கு மாநில மஇகா பல்வேறு அணிகளாக பிளவுபட்டு கிடப்பதாலும் மஇகா-வால் இந்திய வாக்குகளை பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் கவரமுடியாது என்பதால், துணை பிரதமர் தலைமையிலான அம்னோ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மஇகா பினாங்கு மாநில தொடர்பு குழு தலைவராக எம்.கருப்பண்ணன் தற்போது செயல்பட்டு வருகிறார்.

இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அதனால் மஇகாவின் செல்வாக்கும் பலமும் பினாங்கு மாநிலத்திலும் பரவலாக இந்திய சமுதாயத்திலும் மேலும் குறைந்து பாதிப்படையும் என்று மஇகா வட்டாரத்தில் தெரிவித்துள்ளன.