Home நாடு சிலுவையை இருந்த இடத்தில் வைக்க வேண்டும் – சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு

சிலுவையை இருந்த இடத்தில் வைக்க வேண்டும் – சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு

780
0
SHARE
Ad

சிலாங்கூர், ஏப்ரல் 23 – தாமான் மேடானில் தேவாலயத்தில் இருந்து அகற்றப்பட்ட சிலுவையை அந்த இடத்திலேயே வைக்குமாறு தேவாலயத்திற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு ஆலோசனை கூறியுள்ளது.

மலேசியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து எவ்வித அனுமதியும் இன்றி வழிபாட்டுத் தலங்கள் வர்த்தக கட்டிடங்களில் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Crossremoved

#TamilSchoolmychoice

ஆனால், அது குறித்து மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எலிசபெத் வோங் கூறினார்.

“இது போன்ற அரசியல் சார்ந்த தீவிரவாத கும்பல்களின் வன்செயல்முறையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலுவையை அது இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு நாங்கள் தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளோம்” என்று எலிசபெத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

எலிசபெத் வோங் மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் மேடானில் அமைந்திருக்கும் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றுமாறு, அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம் குடியிருப்பாளர்கள், தேவாலய நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து தேவாலயம் அந்த சிலுவையை அகற்றியது குறிப்பிடத்தக்கது.