Home நாடு இடைத்தேர்தலை முன்னிட்டு மே 7-ம் தேதி பினாங்கில் பொது விடுமுறை!

இடைத்தேர்தலை முன்னிட்டு மே 7-ம் தேதி பினாங்கில் பொது விடுமுறை!

615
0
SHARE
Ad

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 28 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் சுமூகமாக நடைபெற எதிர்வரும் மே 7-ம் தேதி பினாங்கு மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் லிம் குவான் எங்.

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100

இதனால், நகரத்துக்கு சற்று தூரத்தில் வசித்து வருபவர்கள் கூட வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அனுமதியின்றி நடத்தப்பட்ட 3 பேரணி பற்றி புக்கிட் மெர்த்தாஜாம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த மூன்று பேரணிகளும் கடந்த சனிக்கிழமை பிகேஆர் வேட்புமனுத்தாக்கல் செய்த நாளில் நடத்தப்பட்டுள்ளதாகவும், நிறைய பேர் இது குறித்து தேர்தல் விதிமீறல்கள் சட்டம் 1954-ன் கீழ் புகார் அளிக்க முன்வருவதாகவும் துணை ஆணையர் அஸ்மி அடாம் சார்பில் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தங்களுக்கு 15 புகார்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்துவதற்கு முன்பு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments