Home இந்தியா மே 14-ல் சீனா செல்கிறார் பிரதமர் மோடி!

மே 14-ல் சீனா செல்கிறார் பிரதமர் மோடி!

466
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, மே 6 – பிரதமர் நரேந்திர மோடி இம் மாதம் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் 6 நாட்கள் சீனா, மங்கோலியா, தென் கொரியா ஆகிய மூன்று  நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த மாதம் 14-ஆம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். மே 16-ஆம் தேதி வரையில் சீனாவில் தங்கியிருக்கும் மோடி, ஜியான், பெய்ஜிங், சாங்காய் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

இந்த பயணத்தின்போது, சீனத் தலைவர்களைச் சந்தித்து  இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பல்வேறு கலாச்சார,  வர்த்தக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

#TamilSchoolmychoice

சீனாவில் இந்திய சமுதாயத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மே 17-ஆம் தேதி சீனாவில் இருந்து  மங்கோலியாவுக்கு செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் மங்கோலியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

அதன் பிறகு தென் கொரியாவுக்கு  செல்கிறார். அதிபர் பார்க் ஜியன் ஹியுடன் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சியோலில் தொழிலதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார். பின்னர் தனது மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு 19-ம் தேதி மோடி  இந்தியா திரும்புகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.