இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

    498
    0
    SHARE
    Ad

    uk-election-050515-400-seithy-worldலண்டன், மே 8 – இங்கிலாந்தில் நேற்று நடைந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.

    இங்கிலாந்தில் தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பிரதமராக டேவிட் கேமரூன் உள்ளார். இவரது ஆட்சி நிறைவடைந்தது.

    இதனையொட்டி 650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.

    #TamilSchoolmychoice

    இதில் 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இவர்களில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 12 இந்திய வம்சாவளியினரும், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் 14 இந்திய வம்சாவளியினரும் அடங்குவார்கள்.

    பிரதமர் டேவிட் கேமரூன், விட்னே தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் எட் மிலிபான்ட், டான் காஸ்டர் வடக்கு தொகுதியிலும் களத்தில் உள்ளார்.

    கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி என இரு பெரும் கட்சிகளுக்கிடையே தான் போட்டி நிலவுகிறது. ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததையடுத்து.

    தற்போது ஓட்டு எண்ணிக்கை நடந்துவருகிறது. இன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 326 இடங்களை கைப்பற்றும் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

    ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.