Home கலை உலகம் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: படப்பிடிப்பில் பங்கேற்றார் சல்மான் கான்!

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: படப்பிடிப்பில் பங்கேற்றார் சல்மான் கான்!

449
0
SHARE
Ad

salman34554மும்பை, மே 13 – மும்பை பாந்திராவில் குடிபோதையில் கார் ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் பரபரப்பு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து, அவர் உச்சநீமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அவர் மீதான தண்டனையை உச்சநீமன்றம் நிறுத்தி வைத்தது.

இதனிடையே, நடிகை கத்ரீனா கைப்புடன் அவர் நடித்து வந்த ‘பாஜ்ரானி பைஜான்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வந்தது.

#TamilSchoolmychoice

வழக்கில் இருந்து விடுபட்டதன் காரணமாக மீண்டும் சல்மான்கான் படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பி உள்ளார். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகவலை பாஜ்ரானி பைஜான் பட இயக்குனர் கபீர்கான் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக இயக்குனர் கபீர்கான் டுவிட்டரில்; ‘‘படப்பிடிப்புக்காக சல்மான்கான் காஷ்மீர் திரும்பி இருக்கிறார். இங்கு இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் சோனம் கபூருடன், சல்மான்கான் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘பிரேம் ரத்தான் தான் பயோ’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என பாலிவுட் சினிமா செய்திகள் வெளியாகியுள்ளது.