Home வாழ் நலம் மார்பக புற்றுநோயை தடுக்கும் தக்காளிச் சாறு!

மார்பக புற்றுநோயை தடுக்கும் தக்காளிச் சாறு!

1114
0
SHARE
Ad

Tomato-Juiceஜூன் 3 – உங்களது ஆரோக்கிய நலனுக்கு எப்போதும் ஏற்ற பழரசமாக திகழ்வது தக்காளி சாறு. இதில் வைட்டமின் ஏ மற்றம் சி-யின் சத்து மிகுதியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது.

ஆய்வுகளில் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த தக்காளி சாறு பயன்படுவதாகக் கூறப்படுகிறது. தக்காளியில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அமிலம் இருக்கின்றது. இது, உடலை நோய் தொற்றுகளிடம் இருந்தும், உடல்நலக் குறைவுப் பிரச்சனைகளில் இருந்தும் காக்க உதவுகிறது.

தக்காளியில் அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் சி சத்து உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் தக்காளி சாறு பருகுவது உங்கள் உடலை நன்றாக வைத்துக் கொள்ள உதவும். தக்காளி சாற்றை வடிகட்டாமல் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

#TamilSchoolmychoice

ஆய்வுகளில் தக்காளியில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் அமிலம் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

Tomato Juiceதக்காளியில் இருக்கும் மூலப் பொருட்கள், உடலில் உள்ள நச்சு தன்மையுடைய கிருமிகளை அழிக்க உதவுகிறது. மற்றும் உடலை சுத்தம் செய்கிறது.

தக்காளியில் இருக்கும் வைட்டமின் ‘பி’ சத்து இதய நோய்களை 30% வரை குறைக்க உதவுகிறது. தக்காளியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுகளை தடுக்கவல்லது. மற்றும் இது முக்கியமாக மார்பக புற்றுநோயை எதிர்த்து போராட கூடியது.