புதுடெல்லி, ஜூன் 8 – வங்கதேசத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையே நில எல்லை ஒப்பந்தம் நேற்று முன்தினம் நிறைவேறியது.
இதன் மூலம் 41 ஆண்டுகால எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே பேருந்து சேவையும் தொடக்கப்பட்டது.
அத்துடன், வங்கதேசத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 12 ஆயிரம் கோடியை, இந்தியா வழங்குவதாக மோடி அறிவித்தார். விடுதலைப் போர் கவுரவ விருதினை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, வங்கதேச அரசு நேற்று வழங்கியது.
இதனை வாஜ்பாய் சார்பாக மோடி பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், வங்கதேச சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இந்தியா திரும்பியுள்ளார் நரேந்திர மோடி.