Home நாடு காவல்துறை என்னை விசாரணை செய்ய வேண்டும் – நஸ்ரி விருப்பம்

காவல்துறை என்னை விசாரணை செய்ய வேண்டும் – நஸ்ரி விருப்பம்

537
0
SHARE
Ad

Nazri-Featureகோலாலம்பூர், ஜூன் 16 – ஜோகூர் இளவரசருக்குச் சவால் விட்டதற்காக என்னைக் காவல்துறை விசாரணை செய்ய விரும்பினால் செய்யட்டும், காரணம் “நான் சட்டத்தை மீறிச் செயல்படவில்லை” எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் தெரிவித்துள்ளார்.

“நான் சட்டத்தை மீறவில்லை. சில நடவடிக்கைகள் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். பொதுமக்களில் இருந்து யாராவது புகார் அளித்தால், அதை நடப்பு தேசியக் காவல்படைத் தலைவர் விசாரணை செய்வது அவரது கடமை” என்று நஸ்ரி நேற்று தெரிவித்துள்ளார்.

துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிற்கு எதிராக சவால் விடுத்ததற்காக, நஸ்ரி விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனத் தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளதற்கு நஸ்ரி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு (படம்) எதிராக நஸ்ரி அசிஸ், “ஒதுங்கியிருங்கள்! இல்லாவிட்டால் நாங்கள் பதிலடி தருவோம்” என்ற தொனியில் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பேஸ்புக்கில் அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.