Home நாடு மெல்பெர்னில் மாரா அலுவலகங்களில் அதிரடிச் சோதனை! கணினிகள் பறிமுதல்!

மெல்பெர்னில் மாரா அலுவலகங்களில் அதிரடிச் சோதனை! கணினிகள் பறிமுதல்!

841
0
SHARE
Ad

dudleyhousepngமெல்பெர்ன், ஜூன் 26 – ஆஸ்திரேலியாவில் மாரா பல்கலைக்கழகம் வாங்கியுள்ள சொத்துக்களை நேற்று அந்நாட்டின் கூட்டரசுக் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வெர்மவுண்ட் சவுத் என்ற பகுதியில் நேற்று அதிரடியாகச் சோதனைகளை நடத்திய ஆஸ்திரேலிய கூட்டரசு அதிகாரிகள், அந்தப் பகுதியில் மாரா வாங்கியுள்ள வீடுகளுக்குள் இருந்த கணினிகளை முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் மெல்பெர்ன் நகரில் மாரா வாங்கியுள்ள சொத்துக்கள் பலவற்றிலும் அடுத்தடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 115 மலேசிய மாணவர்களுக்காக மாரா, மெல்போர்னில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் வாங்கியது.

இதில் பல மில்லியன் ரிங்கிட் மோசடி நடந்துள்ளதாக மெல்போர்னில் செயல்பட்டு வரும் ‘தி ஏஜ்’ பத்திரிக்கை குற்றம்சாட்டியது. மேலும், இந்த மோசடியில் மாரா தலைவர் டத்தோ முகமது லான் அலானி உட்பட முக்கிய அதிகாரிகள் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் உண்மையான விலையை விட சில மில்லியன் ரிங்கிட் அதிகமாக அரசிற்குக் கணக்குக் காட்டியதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.