ஜகார்த்தா, ஜூலை 2 – இந்தோனேசியாவின் இராணுவ விமானம், சுமத்ரா தீவின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்று அந்நாட்டு விமானப் படை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள முதற்கட்டத் தகவலின் படி, “விமானத்தின் சுழற்காற்றாடி(propeller) சரியாகச் செயல்படாத காரணத்தினால், விமானம் புறப்பட்டு மேலெழும்பும் தருணத்தில் போதிய வேகம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே விபத்து நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
எனினும், விமானம் ஓடுபாதையில் குறைந்த தூரமே ஓடி மேல் எழுந்ததால், இந்த விபத்து நடந்துள்ளதாக விமானத்தை அருகில் இருந்து கண்காணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே விமான விபத்து குறித்து இந்தோனேசிய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் இதுவரை 141 பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.