Home உலகம் எரிமலைச் சாம்பலினால் இந்தோனேசிய விமான நிலையங்கள் மூடல்!

எரிமலைச் சாம்பலினால் இந்தோனேசிய விமான நிலையங்கள் மூடல்!

470
0
SHARE
Ad

denpasar-airportபாலி, ஜூலை 10 – இந்தோனேசியாவில் எரிமலையில் இருந்து கிளம்பிய சாம்பல், மேகங்களில் சூழ்ந்து இருப்பதால் 250-க்கும் மேற்பட்ட விமானங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள 5 விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இருக்கும் ராங் எரிமலை, கடும் புகையுடன் சாம்பல்களைக் கக்கத் தொடங்கி உள்ளது. இதனால், இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில், வானம் கருமையான மேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் விமானங்களை இயக்குவது பேராபத்தை விளைவிக்கும் என்பதால், இன்று அனைத்து விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குறித்த நாளில் தங்கள் தாயகத்திற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

விமான நிலையங்கள் எப்போது திறக்கப்படும், விமானங்களின் போக்குவரத்து எப்போது செயல்படும் என்பது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இஸ்லாமியர்களின் நாடான இந்தோனேசியாவில் இந்துக்களின் சமய சம்பிரதாயங்களுக்குப் பிரசித்த பெற்ற இடமான பாலியும் கடுமையான சாம்பல் புகை மண்டலங்களால் சூழப்பட்டுள்ளது. அங்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊர் திரும்ப வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

தற்சமயம், விமான நிலையங்கள் இரவு 9.30 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களுக்காக விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.