Home நாடு லோ யாட் மோதல்: சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோ கைது!

லோ யாட் மோதல்: சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோ கைது!

700
0
SHARE
Ad

papagomaகோம்பாக், ஜூலை 15 – கடந்த வார இறுதியில், லோ யாட் பிளாசாவில் நடைபெற்ற மோதல் தொடர்பில், ‘பபகொமோ’ என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ், இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

“பபகொமோவை இன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தோம். அவரது அறையில்” என்று தேசிய காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

லோ யாட் பிளாசா மோதல் நிகழ்ந்த நேரத்தில், எப்போதோ விபத்து ஒன்றில் காயமடைந்த மலாய்காரர் ஒருவரின் படத்தைத் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து, கலவரத்தின் போது காயமடைந்ததாகக் கூறி, பிரச்சனையை மேலும் பெரிது படுத்தினார் பபகொமோ என்பது குறிப்பிடத்தக்கது.