Home இந்தியா சீனாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியர் விடுவிப்பு

சீனாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியர் விடுவிப்பு

642
0
SHARE
Ad

Arrest1(C)_23சீனா, ஜூலை 18- சீனாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, டெல்லியைச் சேர்ந்த இந்தியர்  குல்ஷேர்ஷ்தா நேற்று விடுவிக்கப்பட்டார்,

தென் ஆப்பிரிக்கச் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த குழுவிலிருந்து 20 பேர் 47 நாள் சுற்றுலாப் பயணமாகச் சீனா சென்றிருந்தனர். அவர்கள் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இன்னர் மங்கோலியா நகரமான எர்டாஸ் நகர விமான நிலையத்தில் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பிரச்சாரக் காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்ததாகச் சீன அதிகாரிகள் குற்றம்சாட்டி, அவர்களைக் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

விசாரணைக்குப் பிறகு 11 பேரை மட்டும் சீனக் காவல்துறையினர் விடுவித்தனர். ஆனால், இந்தியரை விடுவிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில், தீவிரவாதக் கும்பலோடு தொடர்பில்லை என முடிவிற்கு வந்து, ஒருவழியாய் அவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட அவர் பெய்ஜிங்கிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.