Home நாடு ஒரேநாளில் இரு இரயில்களில் இயந்திரக் கோளாறு – தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு

ஒரேநாளில் இரு இரயில்களில் இயந்திரக் கோளாறு – தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு

675
0
SHARE
Ad

LRTகோலாலம்பூர், ஜூலை 22 – தலைநகரில் இன்று ஒரே நாளில் இரண்டு எல்ஆர்டி இரயில்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று காலை 8 மணியளவில் செத்தியவாங்சா எல்ஆர்டி நிறுத்தத்திலும், இரண்டாவது சம்பவம் கிளானா ஜெயா எல்ஆர்டி தடத்தில் மதியம் 12.18 மணியளவிலும் ஏற்பட்டது.

இயந்திரக் கோளாறினால் இரயிலில் சிறிய அளவில் தீப்பற்றியது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என ரேபிட் இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரேபிட் இரயில் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகமட் நிசாம் முகமட் அமின் மன்னிப்பு கோரியுள்ளார்.