பாகுபலி திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வசனம் இடம்பெற்றிருப்பதைக் கண்டித்து முழக்கமிட்டபடி வந்த புரட்சிப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர், நத்தம் சாலையில் உள்ள தமிழ், ஜெயா என்ற இரண்டு திரையரங்க வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
பின்னர், அவர்கள் முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று, தல்லாகுளம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெய்வாதீனமாகப் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், பெரிய அளவில் உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.
Comments