Home கலை உலகம் விஜய்-ஸ்ருதி இணைந்து பாடிய புலி படப் பாடலின் முன்னோட்டம் வெளியானது!

விஜய்-ஸ்ருதி இணைந்து பாடிய புலி படப் பாடலின் முன்னோட்டம் வெளியானது!

648
0
SHARE
Ad

puliசென்னை, ஜூலை 24 – புலி படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில், விஜய்-ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து பாடியிருக்கும் பாடல், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானது. இப்பாடலுக்கான வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதி உள்ளார். ‘ஏண்டி ஏண்டி’ என தொடங்கும் இந்த பாடலை தேவிஸ்ரீ பிரசாத், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சமர்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்பாடல் வெளியான சில மணி நேரங்களில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கப்பட்டுள்ள இந்த படம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த பாடலின் முன்னோட்டத்தைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice