Home இந்தியா சட்டக் கல்லூரி மாணவர்களும் மது விலக்குப் போராட்டத்தில் குதித்தனர்!

சட்டக் கல்லூரி மாணவர்களும் மது விலக்குப் போராட்டத்தில் குதித்தனர்!

487
0
SHARE
Ad

highcourt_1970547fசென்னை, ஆகஸ்டு 4- தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் மதுக்கடைகளை அகற்றக் கோரியும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்து குறளகம் அருகே சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர்ப் போராட்டத்தில் இறங்கினர்.

அதைத் தொடர்ந்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மதுக்கடை ஊழியர்களை மீட்டதோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களைக் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

திருச்சியில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பூரண மதுவிலக்கு கோரியும், மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். மேலும் ,ஊர்வலமாக வந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.