வாஷிங்டன், ஆகஸ்ட் 15 – சிரியாவின் வட பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு பிணைக்கைதியாக ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க தொண்டு அமைப்பின் சேவகி கைலா முல்லர்(26) கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், அந்த இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதியால்(படம்) தொடர்ச்சியாக பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தீவிரவாத தடுப்புக் குழு, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில், “ஐஎஸ்ஐஎஸ் இயக்க தலைவனாக தன்னை அறிவித்துக்கொண்ட அபு பக்கர் அல் பாக்தாதி, கைலா முல்லரை தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கி உள்ளான். கைலாவிற்கு நேர்ந்த கொடுமை பற்றி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
தீவிரவாத தடுப்புக் குழுவின் கூற்றை, கைலாவின் பெற்றோர் உறுதி செய்துள்ளனர்.