Home இந்தியா பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழகச் சட்டசபை கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழகச் சட்டசபை கூடுகிறது!

629
0
SHARE
Ad

22--221536சென்னை- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிப் பின்னர் விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதன்முதலாகத் தமிழகச் சட்டசபை இன்று கூடுகிறது.

இன்று தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர், செப்டம்பர் 29ம் தேதி வரை நடைபெறும். இரங்கல் தெரிவிக்கப்படும் நாளையும் சேர்த்து மொத்தம் 18 நாட்கள் இக்கூட்டத் தொடர் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கும் கூட்டத் தொடர் இதுவென்பதால், இந்தக்  கூட்டத் தொடரின் நடைமுறை குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் வாசிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும்.

அடுத்த நாள் முதல் இந்தக் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைள் மீது விவாதம் நடத்தப்பட்டு, அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.

இந்தக் கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு எனப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மதுவிலக்குப் பிரச்னை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை முதல் சட்டசபையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.