Home Featured நாடு பெர்சே 4.0: நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – காலிட் எச்சரிக்கை

பெர்சே 4.0: நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – காலிட் எச்சரிக்கை

444
0
SHARE
Ad

khalid-abu-bakar-perhimpunan-8-meiஜோகூர் பாரு – நாளை நடைபெறவுள்ள மாபெரும் பெர்சே 4.0 பேரணி குறித்து இப்போதே மக்களிடையே பதட்ட நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரணியில் ஒரே ஒரு நபரின் செயல் கூட மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி சட்ட ஒழுங்கை சீர்குலைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் நாளை ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பெர்சே பேரணியில் அவ்வளவு பெரிய அளவிலான கூட்டம் சேரும் போது என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கவலைப்படுகிறதா என்ற கேள்விக்கு, “ஆமாம்.. அதனால் தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து அவர்களிடம், இடத்தை மாற்றும் படி கூறி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.