Home Featured நாடு பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்ட பிகேஆர் உறுப்பினர் மாயம்!

பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்ட பிகேஆர் உறுப்பினர் மாயம்!

692
0
SHARE
Ad

Feature-bersih-crowdபெர்லிஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெர்சே 4 இரண்டாம் நாள் பேரணியில் கலந்து கொண்ட தங்களது உறுப்பினர் மாயமாகிவிட்டதை பெர்லிஸ் பிகேஆர் உறுதிப்படுத்தியுள்ளது.

பஹ்ரி இப்ராகிம் (வயது 50) என்ற அந்த உறுப்பினரை டத்தாரான் மெர்டேக்கா மற்றும் மஜ்சித் இந்தியா ஆகிய பகுதிகளில் தேடும் படி மற்ற பிகேஆர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்வதாக பிகேஆர் தலைமைத்துவ குழுவின் தலைவர் முகமட் ஃபிசோல் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று டாங் வாங்கி காவல்துறைத் தலைமை துணை ஆணையர் சைனோல் சாமா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice