Home கலை உலகம் அமிதாப் பச்சனின் டுவிட்டரில் ஊடுருவி ஆபாசக் காணொளிகள் பரப்பல்!

அமிதாப் பச்சனின் டுவிட்டரில் ஊடுருவி ஆபாசக் காணொளிகள் பரப்பல்!

676
0
SHARE
Ad

amitabhமும்பை – இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் டுவிட்டர் கணக்கில் ஊடுருவி, அதன் மூலம் ஆபாசக் காணொளிகளைப் பரப்பி வருகிறார்கள் சில சமூக விரோதிகள். இது தொடர்பாக அவர்  மும்பை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

டுவிட்டர் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் நாள்தோறும் தொடர்பில் இருக்கும் பிரபலங்களில் நடிகர் அமிதாப்பச்சனும் ஒருவர்.

அவர் தன்னுடைய பட விவரம் மற்றும் அன்றாட நிகழ்வுகள் போன்றவற்றை அடிக்கடி டுவிட்டரில் வெளியிடுவது வழக்கம்.

#TamilSchoolmychoice

இவரது டுவிட்டர் பக்கத்தினை ஒன்றரைக் கோடிப் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவருடைய டுவிட்டர் கணக்கில் ஊடுருவிய சமூக விரோதிகள் அதிலிருந்து ஆபாசக் காணொளிகளைப் பரப்பத் தொடங்கினர்.

இதனால் அமிதாப் பச்சனும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அவர் உடனடியாக மும்பை காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரது டுவிட்டர் பக்கம் சரி செய்யப்பட்டது.

பின்னர் இந்த அசம்பாவிதம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“எனது டுவிட்டர் கணக்கை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆபாசத் தகவல்களைப் பரப்ப முயன்றுள்ளனர். நண்பா! எனக்கு இது தேவையில்லாதது” எனத் தெரிவித்துள்ளார்.