Home உலகம் பாங்காக் குண்டுவெடிப்பு:குற்றவாளியின் கைரேகை ஒத்துபோவதாகத் தகவல்!

பாங்காக் குண்டுவெடிப்பு:குற்றவாளியின் கைரேகை ஒத்துபோவதாகத் தகவல்!

631
0
SHARE
Ad

bongkok2பாங்காக் – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் பலியான பாங்காக் குண்டு வெடிப்பில், கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கைரேகை, கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் பொருளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போவதாக தாய்லாந்து காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் பாங்காக்கின் எராவன் புனிதத்தலத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பிற்கு காரணமான தீவிரவாதிகள் இருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். ஒருவன் பாங்காக்கின் குடியிருப்பு பகுதி ஒன்றிலும், மற்றொருவன் தாய்லாந்து – கம்போடியா எல்லையை கடக்க முயற்சிக்கும் போதும் கைது செய்யப்பட்டான். குறிப்பிட்ட அந்த தீவிரவாதியின் கைரேகை தான், கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் பொருளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப் போகிறது.

bongkok1இது குறித்து தாய்லாந்து காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “கைரேகை ஒத்துப்போகும் அந்த நபர் தான், எராவனுக்கு வெடிகுண்டை எடுத்துச் சென்று இருக்க வாய்ப்புள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக எட்டாவது கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எம்ராஹ் டாவுடோக்லு என்ற துருக்கி நபரை சந்தேகிக்கிறோம். அவனது மனைவி வான்னா சுவான்சனும் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். வெகு விரைவில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.