Home இந்தியா அதிகப் பாதுகாப்பு அம்சங்களுடன் 1000 ரூபாய்த் தாள்கள் வெளியிட முடிவு!

அதிகப் பாதுகாப்பு அம்சங்களுடன் 1000 ரூபாய்த் தாள்கள் வெளியிட முடிவு!

536
0
SHARE
Ad

money1--621x414புதுடில்லி – கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் வெகு விரைவில் அதிகப் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய்த் தாள்களை வெளியி்டத் திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய்த் தாள்கள் வெளியிடப்பட்டன.

அந்த வரிசையில் இன்னும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் 1000 ரூபாய்த் தாள்கள் வெளியிடப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு அம்சங்களைப் போல் இந்தியாவிலும் பின்பற்றப்படும்.

ரூபாய்க்கான சின்னத்துடன் எல் என்ற ஆங்கில எழுத்து இணைக்கப்பட்டிருக்கும். எண்கள் சிறிய வடிவத்தில் ஆரம்பித்துப் பெரிய வடிவத்தில் முடியும்.

புதிதாக வெளியிடப்படவுள்ள ஆயிரம் ரூபாய்த் தாள்களும் 2005 காந்தி வரிசையிலே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.