Home கலை உலகம் ‘ஐஸ்’ என்னும் பெயரில் அருண் விஜய் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்!

‘ஐஸ்’ என்னும் பெயரில் அருண் விஜய் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்!

629
0
SHARE
Ad

02-1441182475-arun-vijay-iceசென்னை – என்னை அறிந்தால் படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற உற்சாகத்தோடு நடிகர் அருண் விஜய், ‘ஐஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், பல படங்களில்  நடித்தாலும் பெரிய வெற்றியை அவர் அடையவில்லை.

இதனால் துவண்டு போயிருந்த அவருக்குத் ‘தடையறத் தாக்க’ படம் பெரும் திருப்பத்தைக் கொடுத்தது.

#TamilSchoolmychoice

அடுத்து அஜீத்துக்கு வில்லனாக அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் நல்ல நடிகர் என்ற பெயரைத் தேடித் தந்தது.

அப்படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

தற்போது தெலுங்கில் ராம் சரண் மற்றும் கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் படங்களிலும் அருண் விஜய் நடித்து வருகிறார்.

இந்திய அளவில் புகழையும் வாய்ப்பையும் பெற்றுவிட்ட தெம்போடு இப்போது சொந்தமாகப் பட நிறுவனம் தொடங்கியுள்ளார் அருண் விஜய். ‘இன் சினிமாஸ் எண்டர்டெயின்மென்ட் (ICE)’ என்று அதற்குப் பெயரிட்டுள்ளார்.

இதன் மூலம் புதிய கலைஞர்களை  அறிமுகப்படுத்த உள்ளதாகவும், திறமையிருந்தும் சாதிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே இந்தச் சினிமா நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாகவும் நேற்று அறிவித்தார்.